/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.7 லட்சம் தங்கத்துடன் ஊழியர் மாயம்
/
ரூ.7 லட்சம் தங்கத்துடன் ஊழியர் மாயம்
ADDED : ஏப் 14, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழுகிணறு:சவுகார்பேட்டை, வைகுண்ட வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் சத்யநாராயணா கிரி, 49. மேற்குவங்கத்தைச் சேர்ந்த இவர், வால்டாக்ஸ் சாலையில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனுபன்ஜான் என்பவர், கடந்த 7ம் தேதி வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில், அனுபன்ஜானிடம், கடந்த 9ம் தேதி, தங்க நகை செய்வதற்காக, 100 கிராம் தங்க கட்டியை கொடுத்து சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது, அனுபன்ஜான், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 கிராம் தங்க கட்டியுடன் மாயமானார். ஏழுகிணறு போலீசார் விசாரிக்கின்றனர்.

