/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்துாக்கி அறுந்து விழுந்து ஊழியர் பலி
/
மின்துாக்கி அறுந்து விழுந்து ஊழியர் பலி
ADDED : மார் 13, 2025 12:13 AM
சென்னை: பெரம்பூரைச்சேர்ந்தவர் ஷியாம் சுந்தர், 35. மின்துாக்கி பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை, தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பொருட்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் மின் துாக்கி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
மூன்றாம் கீழ் தளத்தில்பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, முதல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்துாக்கி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஷியாம் சுந்தர் உயிரிழந்தார்.
உடனே, சக ஊழியர்கள்இரும்பு ராடுகளுக்கு இடையே சிக்கிய உடலை மீட்டனர். சம்பவம் அறிந்துவந்த தேனாம்பேட்டை போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.