/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடையில் ரூ.9 லட்சம் திருடிய ஊழியர்கள் கைது
/
கடையில் ரூ.9 லட்சம் திருடிய ஊழியர்கள் கைது
ADDED : ஏப் 14, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிந்தாதிரிப்பேட்டை:சிந்தாதிரிப்பேட்டை, சுங்குவார் அக்ரஹாரம் தெருவில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருபவர் அம்ரித் குமார், 38.
இவரது கடையில், வட மாநிலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். கடந்த 8ம் தேதி, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 9 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
இதில், கடையில் வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு, 24, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ், 30, ஆகியோர் திருடியது தெரிய வந்தது.
அவர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

