/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதையில் ஆக்கிரமிப்பு ரூ. 63,900 அபராதம்
/
நடைபாதையில் ஆக்கிரமிப்பு ரூ. 63,900 அபராதம்
ADDED : மார் 09, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் மண்டலத்தில், 5வது வார்டு முதல், 14 வது வார்டு வரையிலான, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து, விளம்பர பலகைகள், பேனர்கள் வைத்திருப்பதாக புகார் எழுந்தது.
மண்டல உதவி கமிஷனர் விஜயபாபு தலைமையில், செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் நக்கீரன், ஊழியர்கள் அடங்கிய குழுவினர், மூன்று நாட்களாக, சாலையோரம் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இறங்கினர்.
அதன்படி, சாலையை ஆக்கிரமித்திருந்த, 40 கடைகளின் ஆக்கிரமிப்பு விளம்பர பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. தொடர்ந்து, 63,900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.