/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி, கோயம்பேடில் எஸ்கலேட்டர் மேம்பாலம்
/
வேளச்சேரி, கோயம்பேடில் எஸ்கலேட்டர் மேம்பாலம்
ADDED : ஜூன் 26, 2024 12:09 AM
சென்னை, ''வேளச்சேரி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் மற்றும் கோயம்பேடு 100 அடி சாலை சந்திப்பில், எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலங்கள் கட்டப்படும்,'' என, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு அறிவித்துள்ளார்.
சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:
வேளச்சேரி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகிலும், நுாறடி சாலையில் உள்ள கோயம்பேடு சந்திப்பு அருகேயும், எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலங்கள், 35.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்கும் நோக்கத்தில், காமாட்சி மருத்துவமனை முதல் துரைப்பாக்கம் வரை உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.