/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிர் துப்பாக்கி சுடும் போட்டி முதலிடம் பிடித்த ஏட்டு ரூபாவதி
/
மகளிர் துப்பாக்கி சுடும் போட்டி முதலிடம் பிடித்த ஏட்டு ரூபாவதி
மகளிர் துப்பாக்கி சுடும் போட்டி முதலிடம் பிடித்த ஏட்டு ரூபாவதி
மகளிர் துப்பாக்கி சுடும் போட்டி முதலிடம் பிடித்த ஏட்டு ரூபாவதி
ADDED : ஜூன் 19, 2024 12:15 AM

சென்னை, தமிழக காவல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில், பெண் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்து வருகிறது.
மூன்றாம் நாளான நேற்று நடந்த ரைபிள் சுடும் போட்டியில், தமிழக காவல் துறை தலைமைக் காவலர் ரூபாவதி, முதல் இடத்தை பிடித்தார்.
இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் நேஹா தேவி, இரண்டாவது இடத்தையும், குஜராத் காவல் துறை உதவி ஆய்வாளர் டோமர், மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
கார்பைன் சுடும் போட்டி எண்: 2ல், 40 கஜம் ஸ்டாண்டிங் போட்டியில், எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனை அனு ராய் முதலிடம் பிடித்தார்.
கர்நாடக காவல் துறை வீராங்கனை காவலர் ஷோபா, ஜார்க்கண்ட் காவல் துறை வீராங்கனை பிராஸ்மணி குமாரி, அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்
கார்பைன் சுடும் போட்டி எண்: 3ல், 50 கஜம் நீலிங் போட்டியில், குஜராத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் டோமர் முதல் இடத்தை பிடித்தார்.
இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் ஸ்டான்சின் டோல்மா, தமிழக காவல் துறை வீராங்கனை காவலர் கீதா, முறையே இரண்டு, மூன்றாவது இடங்களை கைப்பற்றினர்
கார்பைன் சுடும் போட்டி எண்: 4ல், 50 கஜம் ப்ரோன் ஸ்னாப் ஷூட்டிங் போட்டியில், குஜராத் காவல் துறை உதவி ஆய்வாளர் டோமர் முதல் இடம் வகித்தார்.
எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் ஜகேனுர் பேகம் இரண்டாவது இடத்தையும், பீகார் காவல் துறை வீராங்கனை துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை, உயர் அதிகாரிகள் வழங்கினர்.