/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் கண்ணாடியை உடைத்த பழைய குற்றவாளி கைது
/
பஸ் கண்ணாடியை உடைத்த பழைய குற்றவாளி கைது
ADDED : ஜூலை 19, 2024 12:21 AM

கோயம்பேடு, மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்த பழைய குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடில் இருந்து வியாசர்பாடி செல்லும் தடம் எண் '46ஜி' மாநகர பேருந்து, நேற்று முன்தினம் அயனாவரம் வழியாக சென்றது. அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது, அங்கு வந்த மர்ம நபர், பேருந்தின் முன் நின்று ரகளையில் ஈடுபட்டார்.
பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணியர், அவரை நகர்ந்து செல்லும்படி கூறினர். ஆனால் அந்த நபர், ஆபாச வார்த்தைகள் பேசி, கையால் பேருந்து கண்ணாடியை குத்தினார்.
இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
இதையடுத்து, அங்கிருந்தோர் அந்த நபரை மடக்கிப் பிடித்து, அயனாவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், ஆவடி, குமரன் நகர் டவுன்ஷிப்பைச் சேர்ந்த மகேஷ்குமார், 26, என தெரிந்தது.
மேலும் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உடைய பழைய குற்றவாளி என தெரிந்தது. இதையடுத்து நேற்று, மகேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.