/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் ராஜகோபுர விவகாரம் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
/
கோவில் ராஜகோபுர விவகாரம் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
கோவில் ராஜகோபுர விவகாரம் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
கோவில் ராஜகோபுர விவகாரம் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
ADDED : ஜூலை 10, 2024 11:55 PM
சென்னை, ஜூலை 11--
சென்னை, வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலில், 1.98 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திருப்பணி நடக்க உள்ளது.
மேற்கு மாம்பலம், பாஷ்யகார ஆதி சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் 59.40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மரத்தேர் உருவாக்கும் பணியை துவக்கி வைத்த பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
ராயப்பேட்டை, துர்க்கையம்மன் கோவிலின் கீழ், மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அப்பணியின்போது, ஸ்திரத்தன்மை இல்லாமல் ராஜகோபுரத்தில் பாதிப்பு ஏற்படும்.
எனவே, அதை அகற்ற மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் வழிகாட்டுதல்படி செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.