/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
/
எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
ADDED : ஜூலை 03, 2024 12:09 AM
சென்னை, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பயணியரின் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து இயக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி - எழும்பூர் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், வரும் 18ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
எழும்பூர் - திருநெல்வேலி இடையே வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.