
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துாரைச் சேர்ந்தவர் கலீல், 78. குன்றத்துார், மேட்டு தெரு பகுதியில் கிளினிக் வைத்து, மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இவர் டாக்டருக்கு படிக்காமலேயே மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரின்படி, மருத்துவத் துறை அதிகாரிகள், அந்த கிளினிக்கிற்கு சென்று சோதனை செய்தனர்.
பின், குன்றத்துார் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, போலி டாக்டர் கலீலை போலீசார் கைது செய்தனர். இவரது கிளினீக்கில் இருந்து ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்தனர்.