/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி நகை அடகு வைத்தவர் பிடிபட்டார்
/
போலி நகை அடகு வைத்தவர் பிடிபட்டார்
ADDED : ஜூன் 25, 2024 12:41 AM
ஓட்டேரி, ஓட்டேரி, ஜமாலியா பகுதியைச் சேர்ந்தவர் ராம்பால், 31; மேட்டுப்பாளையத்தில், அடகுக்கடை நடத்தி வருகிறார்.
கடந்தாண்டு ஆக., 26ம் தேதி, புதுப்பேட்டையைச் சேர்ந்த சீனிஜாபர் அலி, 46, என்பவர் ரம்பாலுக்கு அறிமுகமானார். சீனிஜாபர் அலி, 'என் உறவினரின் 32 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளது.அதை நீங்களே மீட்டுக் கொள்ளலாம்' என, ராம்பாலிடம் கூறியுள்ளார்.
ராம்பால், 10.10 லட்சம் ரூபாய் கொடுத்து 32 சவரன் நகையை மீட்டார். அந்த நகையை, பெங்களூரில் உள்ள தனலட்சுமி வங்கியில் அடகு வைத்து, 10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
பின், அடுத்தடுத்து, சீனிஜாபர் அலி, 3 மற்றும் 6 சவரன் நகைகளை ராம்பாலிடம் கொடுத்து, 3 லட்சம் ரூபாய் பெற்றுச் சென்றுள்ளார். நகை மீது ராம்பாலின் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட, நகைகளை சோதித்துள்ளனர். அது போலி என தெரியவந்தது.
மீண்டும், நகைகள் அடகு வைக்க சீனிஜாபர் அலி வந்த போது, ராம்பால் அவரை கடையில் வைத்து பூட்டி போலீசுக்கு தகவல் அளித்தார்.ஆனால், சீனிஜாபர் அலி தப்பினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த சீனிஜாபர் அலியை, போலீசார் கைது செய்தனர்.