ADDED : மே 06, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கோடை விடுமுறையை பலரும் கொண்டாடி வரும் நிலையில், ஞாயிற்றுகிழமையான நேற்று, சென்னையில் ஒரு கிலோ பண்ணை கோழி இறைச்சி 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட இறைச்சி, 10 நாட்களில் 60 ரூபாய் உயர்ந்துள்ளது.
வெயில் காரணமாக, ஆந்திராவின் சித்துாரில் பண்ணைக்கோழிகள் இறப்பு அதிகரித்துள்ளதுடன், முட்டை உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால், கோழி விலையை உயர்த்தியுள்ளனர்.