தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பண்ணையில் தீ விபத்து 2,000 கோழிகள் தீக்கிரை

பண்ணையில் தீ விபத்து 2,000 கோழிகள் தீக்கிரை

பண்ணையில் தீ விபத்து 2,000 கோழிகள் தீக்கிரை


ADDED : ஆக 27, 2024 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 12:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 54. இவருக்கு சொந்தமாக முசரவாக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் பண்ணை அமைத்து, கோழிகள் வளர்த்து வருகிறார்.

நேற்று மாலை 6:00 மணியளவில் திடீரென, இந்த கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பலமாக காற்று வீசியதால், தீ மளமளவென பரவியுள்ளது.

உடனே சீனிவாசன், காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ வேகமாக பரவி, 2,000க்கும் மேற்பட்ட கோழிகள் கருகி இறந்தன.

மேலும் தீ பரவாமல் இருக்க, தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us