/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 வயது மகளுக்கு 'தொல்லை ' தந்த தந்தை கைது
/
5 வயது மகளுக்கு 'தொல்லை ' தந்த தந்தை கைது
ADDED : செப் 03, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், தாம்பரம் காவல் மாவட்டத்தை சேர்ந்த 37 வயது வாலிபருக்கு, 7, 5 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக, 5 வயது மகளுக்கு சிறுமியின் தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சிறுமியை, அவர் குளிக்க வைத்த போது தவறாக நடந்துள்ளார். இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், மகளிடம் விசாரித்த போது, தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது.
தாயின் புகார் படி, விசாரித்த தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் தந்தையை போக்சோவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.