நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர், பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சரத்சந்திரன், 28; இவரது மனைவி காயத்ரி, 22. மூன்று மாதத்திற்கு முன் திருமணமான நிலையில் காயத்ரி, கணவருடன் கண்டிகையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை, சரத்சந்திரன் வேலைக்குச் சென்ற நிலையில், மதியம் 1:00 மணியளவில் மொபைல்போனில் காயத்ரியை தொடர்பு கொண்டபோதுஎடுக்கவில்லை.
பெற்றோர் தேடிய நிலையில், அருகில் இருந்த கிணற்றில் காயத்ரி உடல் மிதந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீசார், தீயணைப்பு படையினர் வாயிலாக சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.