ADDED : செப் 08, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்,
சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த மாரியம்மாள் என்கிற சாயிராபானு, 64. இவர், பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2023 மே 19ம் தேதி முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட இவர், டயாலிசிஸ் செய்வதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கடந்த ஜூலை 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நேற்றிரவு உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.