ADDED : மார் 10, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார்,சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 192 முதல் 200 வார்டுகள் வரை, 300க்கும் மேற்பட்ட மின் மாற்றிகள் உள்ளன.
இதில், 232 மின் மாற்றிகள் சாலையோரம் உள்ளன. சிறுநீர் கழிப்பது, கால்நடைகள் நடமாட்டம் போன்ற காரணங்களால், விபத்து அபாயம் உள்ளது. சில விபத்துகளும் நடந்துள்ளன.
அதனால், ஒவ்வொரு மின் மாற்றிகளைச் சுற்றிலும், மூன்று திசைகளில், 8 அடி உயரம் வரை தடுப்பு சுவர் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்காக, 7.22 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், இதற்கான பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.