/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியுடன் சண்டை பெயின்டருக்கு '9 தையல்'
/
மனைவியுடன் சண்டை பெயின்டருக்கு '9 தையல்'
ADDED : ஆக 15, 2024 12:22 AM
ஓட்டேரி, ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் விஜி, 35; பெயின்டர். மது பழக்கத்திற்கு அடிமையான விஜிக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவரது மனைவி, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மாமியார் வீட்டிற்கு சென்ற விஜி, மனைவியை வீட்டிற்கு வருமாறு கூறி தகராறு செய்துள்ளார். அவர் மறுக்கவே, அதீத போதையில் இருந்த விஜி, திடீரென கத்தி எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டார்.
இதில் காயமடைந்த விஜியை, அவரது சகோதரி நகோமி உள்ளிட்ட உறவினர்கள்கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு, கழுத்தில் 9 தையல்கள் போடப்பட்டன. இது குறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.