தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஜெ.ஜெ., சலவை ‘லிக்விட்’ சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

ஜெ.ஜெ., சலவை ‘லிக்விட்’ சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

ஜெ.ஜெ., சலவை ‘லிக்விட்’ சேமிப்பு கிடங்கில் தீ விபத்து


ADDED : ஜூன் 07, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, துணிகள் துவைக்க பயன்படுத்தும் சலவை ‘லிக்விட்’ எனும் திரவ சோப்பு தொழிற்சாலையின் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, வெங்காடு பகுதியில் துணி துவைக்க பயன்படுத்தும் ‘லிக்விட்’ தயாரிக்கும், ஜெ.ஜெ., எனும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையின் சேமிப்பு கிடங்கு பகுதியில், நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த லிக்விட் பேரல்களில் பரவிய தீ, மளமளவென கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.

இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி பொருட்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்திற்கான காரணம் குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us