ADDED : ஏப் 17, 2024 12:45 AM

அ நிறம் | அளவு
புளியந்தோப்பு புளியந்தோப்பு, பாபு தெருவில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீபக் ஜெயின் என்பவர் பெயின்ட் கிடங்கு வைத்துள்ளார்.
நேற்று காலை 8:30 மணியளவில், பெயின்ட் கிடங்கில் திடீரென தீப்பற்றியது. வியாசர்பாடி, வேப்பேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். தீ விபத்தால் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிர்சேதம் இல்லை. ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளன. மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
