/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுக்குள் வராத விலை மீன் பிரியர்கள் ஏமாற்றம்
/
கட்டுக்குள் வராத விலை மீன் பிரியர்கள் ஏமாற்றம்
ADDED : ஆக 12, 2024 03:41 AM
காசிமேடு:காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகுகளில், 50க்கும் மேற்பட்டவை நேற்று கரை திரும்பின. வவ்வால், சங்கரா, தும்பிலி, வாளை, கானாங்கத்த, நவரை உள்ளிட்ட மீன்களின் வரத்து இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு மீன் வரத்து இல்லை. இதனால், விலை இருமடங்காக இருந்தது.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
ஆடி மாதம் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை என்பதால், காசிமேடு மக்கள் கூட்டத்தால் திருவிழா போல் காட்சியளித்தது.
படகுகளில் மீன் வரத்தும் குறைந்ததோடு, மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், மீன் விலை உயர்ந்து காணப்பட்டது. 3,000 ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு கூடை சங்கரா மீன், 6,000 ரூபாய்க்கும்; 7,000 ரூபாய்க்கு விற்பனையாகும் கறுப்பு வவ்வால் மீன் 11,000 ரூபாய்க்கும் விற்பனையாயின.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
மீன் விலை நிலவரம்
வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 1,200 - 1,500
கறுப்பு வவ்வால் 700 - 900
வெள்ளை வவ்வால் 1,000 - 1,200
சங்கரா 250 - 400
சீலா 300 - 400
வாளை 100
நவரை 100
கானாங்கத்த 100 - 200
நண்டு 300 - 500
இறால் 300 - 500