/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரே கோவிலின் கட்டுப்பாட்டில் வருகிறது ஐந்து உப கோவில்கள்?
/
ஒரே கோவிலின் கட்டுப்பாட்டில் வருகிறது ஐந்து உப கோவில்கள்?
ஒரே கோவிலின் கட்டுப்பாட்டில் வருகிறது ஐந்து உப கோவில்கள்?
ஒரே கோவிலின் கட்டுப்பாட்டில் வருகிறது ஐந்து உப கோவில்கள்?
ADDED : ஜூலை 31, 2024 01:08 AM
வியாசர்பாடி, வியாசர்பாடி, சாமியார் தோட்டத்தில், கரபத்திர சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவிலின் அலுவலகம் வடபழனியில் உள்ளது.
அதேபோல, வியாசர்பாடி பாலாத்தம்மன் கோவிலின் அலுவலகம் ஓட்டேரியிலும், கொடுங்கையூர், பவானியம்மன் கோவிலின் அலுவலகம் சூளையிலும், வியாசர்பாடி, பவானி பெரிய பாளையத்தம்மன் கோவில் அலுவலகம், ஓட்டேரியில் உள்ளன.
மேலும், வியாசர்பாடி கரைகாத்தராமர் கோவில் மற்றும் கொடுங்கையூர், தேவி கருமாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இக்கோவில்களில் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு கோவில் அலுவலகத்தில் தொடர்பு கொள்ள வெகுதுாரம் செல்ல வேண்டி இருந்தது.
அதுமட்டுமல்லாமல், கோவில் ஒரு இடத்திலும், அலுவலகம் மற்றொரு இடத்திலும் இருந்ததால், நிர்வாக சிக்கல்களும் ஏற்பட்டன.
இதையடுத்து, கோவில் மற்றும் அலுவலகத்தை ஓரிடத்தில் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. இதையடுத்து, ஐந்து கோவில்களின் நிர்வாக அலுவலகங்கள் வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலின் கட்டுப்பாட்டில் வர உள்ளன.
இதன் வாயிலாக, பொதுமக்கள் கோவில் வேலைக்காக அலையும் நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.