/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலி இடத்தில் தேங்கும் கழிவுநீரால் காய்ச்சல் அபாயம்
/
காலி இடத்தில் தேங்கும் கழிவுநீரால் காய்ச்சல் அபாயம்
காலி இடத்தில் தேங்கும் கழிவுநீரால் காய்ச்சல் அபாயம்
காலி இடத்தில் தேங்கும் கழிவுநீரால் காய்ச்சல் அபாயம்
ADDED : ஆக 01, 2024 01:01 AM

சோழிங்கநல்லுார் மண்டலம், 20வது வார்டு, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இரண்டு 'பிளாக்'குகள் இடையே, 8 அடி அகலத்தில் காலி இடம் உள்ளது.
காற்றோட்டமாக இருக்கவும், கட்டடம், குழாய் சீரமைப்பிற்காகவும் இந்த இடம் விடப்பட்டு உள்ளது. இதில், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக உள்ளது.
அத்துடன், கடும் துர்நாற்றம் வீசுவதால், துாக்கம் இல்லாமல் தவிக்கிறோம்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மர்ம காய்ச்சலுக்கு நாள்கணக்கில் தேங்கி நிற்கும் கழிவுநீர் ஒரு காரணமாக உள்ளது.
ஆபத்தை உணர்ந்து, இப்பகுதியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எ.காமாட்சி, 52, செம்மஞ்சேரி