/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்முலா - 4 ரேஸ் டிக்கெட் விற்பனை துவங்கியது
/
பார்முலா - 4 ரேஸ் டிக்கெட் விற்பனை துவங்கியது
ADDED : ஆக 05, 2024 12:56 AM
சென்னை, சென்னையில், இம்மாதம் 31, செப்., 1 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள பார்முலா 4 கார் ரேஸ் பந்தயத்தைக் காண்பதற்கான டிக்கெட்டுகள், 'பேடிஎம் இன்சைடர்' வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டில் முதல்முறையாக, மக்கள் புழங்கும் தெருவில், இரவு நேர போட்டியாக, சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட்டில், பார்முலா 4 கார் பந்தயம், ஆக., 31, செப்., 1 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
இதில், கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, நடிகர் ஜான் ஆப்ரகாம் உள்ளிட்ட பிரபலங்களின் அணி வீரர்கள் பங்கேற்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த பந்தயத்தை நேரில் காண, கார் பந்தய பிரியர்களும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், இந்த போட்டியை நேரடியாக காணும் வகையில், பார்வையாளர்களுக்கான டிக்கெட் விற்பனை, பேடிஎம் இன்சைடர் ஆப் வாயிலாக நேற்று, துவங்கியது. துவக்க டிக்கெட் விலை 1,699 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகளை, https://insider.in/indian-racing-festival-2024-chennai-formula-racing-circuit/event என்ற இணைப்பின் வாயிலாக பெறலாம்.