/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிறுவனர் கோப்பை: பைனலில் எஸ்.ஆர்.எம்., - ஜேப்பியார்
/
நிறுவனர் கோப்பை: பைனலில் எஸ்.ஆர்.எம்., - ஜேப்பியார்
நிறுவனர் கோப்பை: பைனலில் எஸ்.ஆர்.எம்., - ஜேப்பியார்
நிறுவனர் கோப்பை: பைனலில் எஸ்.ஆர்.எம்., - ஜேப்பியார்
ADDED : ஆக 22, 2024 12:43 AM

சென்னை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் நிறுவனர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன.
எஸ்.ஆர்.எம்., - லயோலா, ஜேப்பியார் உட்பட மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் முறையில் மோதி வருகின்றன.
நேற்று காலை நடந்த முதல் அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி அணிகள் மோதின.
டாஸ் வென்ற எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் அணி, முதலில் விளையாடி, 20 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 221 ரன்களை அடித்தது.
அணியின் வீரர்கள் விக்னேஷ், 49 பந்துகளில் நான்கு சிக்சர், ஏழு பவுண்டரி என, 81 ரன்களும், ராகுல் 37 பந்துகளில் ஐந்து சிக்சர், ஒன்பது பவுண்டரி என, 74 ரன்களும், நிதின் 32 ரன்களும் அடித்தனர்.
அடுத்து பேட் செய்த, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி அணி, 13.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 52 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதனால், 169 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில், 'டாஸ்' வென்ற லயோலா ஐகாம் அணி, 17.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 160 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, ஜேப்பியார் பல்கலை அணி, 19.5 ஓவர்களில் ஆறு விக்கெட் இழந்து, 164 ரன்களை அடித்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்றைய இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் - ஜேப்பியார் அணிகள் மோதுகின்றன.