/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விசா வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி
/
விசா வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி
ADDED : மே 09, 2024 12:21 AM
விருகம்பாக்கம், ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுதா, 27; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன், சுதா வெளிநாடு செல்ல தேர்வு எழுதச் சென்றார். அப்போது, கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருண் சதீஷ், 33, என்பவர் அறிமுகமானார். அவரிடம் கனடா நாட்டிற்கு செல்ல விரும்புவதாக சுதா கூறியுள்ளார்.
தனக்கு வெளிநாட்டு துாதரக அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், 13 லட்சம் ரூபாய் கொடுத்தால் விசா வாங்கலாம் எனவும் அருண் சதீஷ் தெரிவித்துள்ளார். இதை நம்பி, அருண் சதீஷிடம் 13 லட்சம் ரூபாயை சுதா கொடுத்துள்ளார். ஆனால், விசா வாங்கி தராமல் அருண் சதீஷ் ஏமாற்றி வந்தார்.
இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே இது போல பலரிடம் அருண் சதீஷ் வெளிநாட்டு விசா வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.