/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வு அதிகாரியிடம் ரூ.40 லட்சம் மோசடி
/
ஓய்வு அதிகாரியிடம் ரூ.40 லட்சம் மோசடி
ADDED : மே 23, 2024 12:42 AM
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார், எல்காட் அவென்யூ முதல் தெருவைச் சேர்ந்தவர் அக்குரெட்டி நாகர்ஜுனா, 62; ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், பர்னிச்சர் தொழிலில் பன்மடங்கு லாபம் கிடைப்பதாகக் கூறி, கடந்தாண்டு, ஜூலை மாதம், 40 லட்சம் ரூபாய் பங்குதாரர் என்ற கணக்கில் பெற்றுள்ளார்.
ஆனால், கூறியபடி லாபத்தை தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அக்குரெட்டி அளித்த புகாரின்படி போலீசார் விசாரித்தனர்.
அப்போது, இதேபோல் பலரிடம் பணம் பெற்று, பல கோடி ரூபாய் மோசடியில் ஆறுமுகம் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில் ஆறுமுகம் தலைமறைவானார். தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

