ADDED : ஆக 07, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம், ராயபுரம் தொகுதியில் 21 அரசு பள்ளிகளும், 10க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.
பள்ளி மாணவ - -மாணவியருக்கான அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ராயபுரம் தொகுதிக்குட்பட்ட வள்ளல் எஸ்.ஐ., அழகர்சாமி மேல்நிலைப்பள்ளியில் 115 மாணவர்களுக்கும்; தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி 235 மாணவ - மாணவியர் என, 350 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் நேற்று வழங்கப்பட்டன.
இதை, ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி வழங்கினார். இதில், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.