ADDED : ஜூலை 26, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி,
பூந்தமல்லியில், பார்வைத்திறன் குறையுடையோர் அரசு பள்ளியில், பல் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.
பூந்தமல்லியில், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டில், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்பயிற்சி மையம், மறுவாழ்வு மையம் ஆகியவை இயங்குகின்றன.
இங்கு 150க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். மதுரவாயலில் உள்ள தனியார் பல் மருத்துவமனை சார்பில், இந்த பள்ளி வளாகத்தில், இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.
150க்கும் மேற்பட்ட பார்வைத்திறன் குறையுடையோர் பங்கேற்று பல், ஈறு சிகிச்சை பெற்றனர்.