/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதை தொகுதி மக்களுக்கு இலவச ஆங்கில பேச்சு பயிற்சி
/
சைதை தொகுதி மக்களுக்கு இலவச ஆங்கில பேச்சு பயிற்சி
ADDED : மே 01, 2024 12:43 AM

சென்னை, சைதாப்பேட்டை, பஜார் சாலையில், கலைஞர் கணினி கல்வியகம் உள்ளது. சைதாப்பேட்டை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவியர், இளைஞர்கள், இளம்பெண்களுக்கு கோடை விடுமுறை கால இலவச, ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேர, 8939330671, 9500188691 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
நேற்று, இந்த பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
சைதாப்பேட்டை தொகுதி மாணவ, மாணவியர், இளைஞர்கள், இளம்பெண்களின் திறனை மேம்படுத்தும் வகையில், கலைஞர் கணினி கல்வியகம் வழியாக, பல்வேறு பயிற்சிகளை கட்டணமில்லாமல் வழங்கி வருகிறோம்.
கடந்த நான்கு ஆண்டுகளில்,எம்.எஸ்.ஆபிஸ், டேலி உள்ளிட்ட வேலை வாய்ப்பு திறன் பயிற்சியில், 800க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், பல உயர் பதவிகளில் பணிபுரிகின்றனர்.
பயிற்சியின் மற்றொரு அங்கமாக, கட்டணமில்லா ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளோம். சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட, மாணவ மாணவியர், இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.