ADDED : ஜூலை 17, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
மேடவாக்கம்: ‘தென் சென்னை மொபைல் ரிட்டெய்லர்ஸ் அசோசியேஷன்’ மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து, வரும் 21-ம் தேதி மேடவாக்கம் சமூக நலக்கூடத்தில், இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும் முகாமில், இலவச கண் மற்றும் பார்வைத்திறன் பரிசோதனை, கண் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை வழங்கப்படும். தேவைப்படுவோர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவர்.
கண்களை பாதுகாப்போம், வாழ்க்கையை வளப்படுத்துவோம் எனும் நோக்குடன் நடக்கும் இம்முகாமில், பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொடர்புக்கு: 98849 92275.
