தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பஸ்களில் டிக்கெட் வழங்கும் கருவிகளில் அடிக்கடி பழுது; பயணியர் வாக்குவாதம்

பஸ்களில் டிக்கெட் வழங்கும் கருவிகளில் அடிக்கடி பழுது; பயணியர் வாக்குவாதம்

பஸ்களில் டிக்கெட் வழங்கும் கருவிகளில் அடிக்கடி பழுது; பயணியர் வாக்குவாதம்

1


ADDED : ஜூன் 30, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 11:05 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மாநகர பேருந்துகளில் டிக்கெட் வழங்கும் கருவிகளில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால், நடத்துனர்களுடன் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், தற்போது 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும், 3,585 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தினமும் 34 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி மின்னணு கருவி மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது.

இந்த கருவியில், சிங்கார சென்னை அட்டை, ‘சென்னை ஒன்’ செயலி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் டிக்கெட் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது. இது, பயணியரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே, டிக்கெட் வழங்கும் மின்னணு கருவியில், சில வாரங்களாக அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. செயலியில் மட்டுமே பணம் வைத்திருந்தவர்கள், டிக்கெட் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து, மாநகர பேருந்து நடத்துனர்கள் கூறியதாவது:

மின்னணு கருவி மூலம் பயணியருக்கு டிக்கெட் வழங்கும் முறை எளிமையாக உள்ளது. ஆனால், சில வாரங்களாக அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுகிறது. மின்னணு கருவியின் சார்ஜும் உடனே தீர்ந்து விடுகிறது. இதனால், டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த கருவிகளில் உரிய பராமரிப்பு பணி மேற்கொள்ளாதது, பழைய கருவிகளுக்கு மாற்றாக புதிய கருவிகள் வாங்காதது தான் முக்கிய காரணமாக உள்ளது. வழக்கமாக, ஜி.பே., உள்ளிட்ட செயலிகள் மூலம் டிக்கெட் வாங்கும் பயணியருக்கு, இந்த வசதி தடைப்படுவதால் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாநகர போக்குவரத்து பணிமனைகள் வாரியாக, இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து, விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us