/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரேன் பெல்ட் அறுந்ததில் விநாயகர் சிலை உடைந்தது
/
கிரேன் பெல்ட் அறுந்ததில் விநாயகர் சிலை உடைந்தது
ADDED : செப் 16, 2024 02:09 AM
பாலவாக்கம்,:தென் சென்னையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள், இந்து அமைப்புகளால் பல்வேறு இடங்களில் வழிபாடு செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.
சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில், மேள தாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள், 'டிராலி' வாயிலாக துாக்கப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.
கடலுக்குள் செல்ல பொதுமக்கள், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பாதுகாப்பு கருதி தடுப்புகள், உயர் கோபுரம் அமைக்கப்பட்டது. 'ட்ரோன்' மற்றும் 'சிசிடிவி கேமரா' பொருத்தியும் கண்காணிக்கப்பட்டது.
மாலை 4:00 மணிக்கு, அதிக எடையுள்ள ஒரு விநாயகர் சிலையை லாரியிலிருந்து கிரேன் வாயிலாக துாக்கியபோது, பெல்ட் அறுந்து, விநாயகர் சிலை விழுந்து உடைந்தது.
இதனால் விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

