/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
23 பேரிடம் மோசடி 5 பேர் கும்பல் கைது
/
23 பேரிடம் மோசடி 5 பேர் கும்பல் கைது
ADDED : செப் 11, 2024 12:32 AM
சென்னை,
மத்திய அரசு துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, 23 பேரிடமிருந்து, 1.50 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, 5 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்துாரைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள், 30 ; பி.இ.,பட்டதாரி. அவரது நண்பர் வாயிலாக காட்டாங்குளத்துாரைச் சேர்ந்த அறிவழகன், 29 என்பவர் அறிமுகமானார்.
அவர் மத்திய அரசு துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, இசக்கியம்மாளிடம் 6.65 லட்சம் வாங்கி உள்ளார். பின் போலியான பணியானை கொடுத்து இசக்கியம்மாளை ஏமாற்றி உள்ளார்.
இதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இசக்கியம்மாள் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அறிவழகன், விமல், செல்லப்பாண்டி, திருமுருகன், உதயகுமார் ஆகிய ஐந்து பேரும் ஒன்றைாக இணைந்து, 23 பேரிடமிருந்து, 1.50 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியது தெரிய வந்தது.
வேலை வாய்ப்பு பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேரையும் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மத்திய - மாநில அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் என, சென்னை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.