/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா, ஊசி விற்றோர் கைது
/
வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா, ஊசி விற்றோர் கைது
ADDED : மே 07, 2024 12:08 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே, நசரத்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில், கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 29, சந்தோஷ், 21, கஞ்சா, போதை ஊசி விற்றது தெரிய வந்தது.
இவர்களை பிடித்து விசாரித்தபோது, இவர்களுடன் சேர்ந்து துாத்துக்குடியைச் சேர்ந்த அமிர்தலிங்கம், 21, சூர்யா, 21, மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர், நசரத்பேட்டை அருகே செம்பரம்பாக்கம் பகுதியில், வீடு வாடகைக்கு எடுத்து, கஞ்சா மற்றும் போதை ஊசிகளை விற்றது தெரியவந்தது.
மேலும், கஞ்சா புகைக்க வருவோருக்கு, இந்த வீட்டின் அறையிலேயே இடம் கொடுத்ததும் தெரிந்தது. இவர்களிடம் இருந்த 1.5 கிலோ கஞ்சா மற்றும் போதை ஊசிகளை பறிமுதல் செய்த நசரத்பேட்டை போலீசார், ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையோர் குறித்து, மேலும் விசாரிக்கின்றனர்.