/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாகனத்தை சுற்றி குப்பை பை வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
/
வாகனத்தை சுற்றி குப்பை பை வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
வாகனத்தை சுற்றி குப்பை பை வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
வாகனத்தை சுற்றி குப்பை பை வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
ADDED : ஜூன் 07, 2024 12:14 AM

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் சேகரிக்க, தனியார் நிறுவனம் சார்பில் துாய்மை பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தினமும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை சேகரிக்கப்படுகிறது.
இப்பணியில் ஈடுபடும், ஒவ்வொரு வாகனங்களிலும், சுற்றி சாக்கு பைகளை கட்டி தொங்க விடுகின்றனர். அதில் குவிக்கப்பட்டுள்ள குப்பை, சாலையில் சிதறி விழுகின்றன.
உட்புற தெருக்களில் செல்லும்போது, சுற்றி தொங்கும் சாக்கு பைகள், சாலையினை அடைத்து கொள்வதால், மற்ற வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.
அவ்வாகனங்களின் ஓட்டுனர்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை சாக்கு பை குப்பையால் இடித்து தள்ளிவிடும் நிலையும் ஏற்படுகிறது.
குப்பை வாகனங்களை சுற்றி தொங்கும் சாக்கு பைகளால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.