/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை நடுவே குப்பை தொட்டி மாநகராட்சி செயல் 'வேற லெவல்'
/
சாலை நடுவே குப்பை தொட்டி மாநகராட்சி செயல் 'வேற லெவல்'
சாலை நடுவே குப்பை தொட்டி மாநகராட்சி செயல் 'வேற லெவல்'
சாலை நடுவே குப்பை தொட்டி மாநகராட்சி செயல் 'வேற லெவல்'
ADDED : ஜூலை 27, 2024 01:24 AM

எண்ணுார், திருவொற்றியூர் மண்டலத்தில், தனியார் ஒப்பந்த நிறுவனம் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. குப்பையில்லாத சாலை என்பதற்காக, சில இடங்களில் மட்டும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வீடுகளிலேயே குப்பை தரம் பிரித்து வாங்கப்படுகிறது.
இந்த நிலையில், எண்ணுார் - கத்திவாக்கம் நெடுஞ்சாலையின், நேரு நகர், அசோக் லேலண்ட், எர்ணாவூர் சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில் சாலை நடுவிலே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளன.
குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளில் உணவு தேடும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
அதேபோல, இரவு வேளையில் வாகன ஓட்டிகள், குப்பை தொட்டி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலைமை உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, குப்பை தொட்டி வைக்கும் இடம் குறித்து வழிமுறை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.