ADDED : ஏப் 17, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு, சென்னை, கோயம்பேடு சந்தைக்கு, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, புதினா மற்றும் கொத்தமல்லி வரத்து உள்ளது.
தினமும் 20 -- 22 லாரி புதினா மற்றும் கொத்தமல்லி வரத்து உள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, புதினா மற்றும் கொத்தமல்லி கட்டு 8 -- 10 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, பள்ளி மற்றும் கல்லுாரி விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக பலர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
இதனால், கொத்தமல்லி மற்றும் புதினா விற்பனை மந்தமாக உள்ளது. இதையடுத்து, ஒரு கட்டு 2 -- 3 ரூபாய்க்கு விற்பனையானது. இதில், விற்பனையின்றி தேங்கி அழுகிய கொத்தமல்லி மற்றும் புதினா, மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.

