/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கேலோ இந்தியா' ஜூடோ: 1,000 சிறுமியர் உற்சாகம்
/
'கேலோ இந்தியா' ஜூடோ: 1,000 சிறுமியர் உற்சாகம்
ADDED : செப் 12, 2024 12:09 AM
சென்னை, தமிழ்நாடு ஜூடோ சங்கம் மற்றும் வீர் விவேகா நமோ அகாடமி சார்பில், பெண்களுக்கான 4வது 'கேலோ இந்தியா' பிரிமியர் லீக் தென் மண்டல ஜூடோ போட்டி, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், நேற்று துவங்கியது.
இதில், 12 - 15 வயது சப் - ஜூனியரில், 9 எடை பிரிவுகள்; 16 - 17 வயது கேடட் பிரிவில் 8 பிரிவுகள்; 18 - 20 வயது ஜூனியர் மற்றும் சீனியரில் தலா 7 எடை பிரிவுகளில், போட்டிகள் நடக்கின்றன.
தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட ஆறு மாநிலங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று, சப் - ஜூனியர் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 144 பேர் பங்கேற்று அசத்தினர். போட்டிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கின்றன.