/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அறுவை சிகிச்சையில் ஜெம் மருத்துவமனை புதுமை
/
அறுவை சிகிச்சையில் ஜெம் மருத்துவமனை புதுமை
ADDED : மே 10, 2024 12:34 AM
சென்னை, ஜெம் மருத்துவமனையில், ஆப்பிள் விஷன் ப்ரோவின் மிக்ஸடு ரியாலிட்டி ஹெட்செட்டை பயன்படுத்தி, ஒன்பது அறுவை சிகிச்சைகள் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஜெம் மருத்துவமனையின் தலைவர் சி.பழனிவேலு கூறியதாவது:
ஆப்பிளின் சமீபத்திய கண்டுபிடிப்பான 'விஷன் ப்ரோ' மிக்ஸடு ரியாலிட்டி ஹெட்செட்' அறுவை சிகிச்சை முறைகளில் தனித்துவமான பயன்பாட்டை கொண்டுள்ளது.
இவற்றை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும்போது, எந்த தாமதமும் இல்லை. அறுவை சிகிச்சை நிபுணர் நிஜ உலகத்துடன் எப்போதும் இணைந்திருப்பர். சாதாரணமாக பார்க்கவும், செயல்படவும், அனைத்து மருத்துவ கருவிகளையும் துல்லியமாக பயன்படுத்த முடிந்தது. இந்த விஷன் ப்ரோ, அறுவை சிகிச்சை அரங்கிற்கு தேவையான அனைத்து மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி, அனைத்து டாக்டர்களும் துல்லியமான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.