/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருத்தணி ஜி.ஹெச்.,சில் தீ கர்ப்பிணியர் உயிர் தப்பினர்
/
திருத்தணி ஜி.ஹெச்.,சில் தீ கர்ப்பிணியர் உயிர் தப்பினர்
திருத்தணி ஜி.ஹெச்.,சில் தீ கர்ப்பிணியர் உயிர் தப்பினர்
திருத்தணி ஜி.ஹெச்.,சில் தீ கர்ப்பிணியர் உயிர் தப்பினர்
ADDED : மார் 15, 2025 12:26 AM

திருத்தணி, திருத்தணி அரசு மருத்துவமனையில், மகப்பேறு வார்டில் கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்கும் அறையில் இருந்த 'பிரிஜ்'ஜில், நேற்று மாலை 3:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை தலைமை மருந்தாளர் நேதாஜி மற்றும் மருத்துவ ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாதுர்யமாக செயல்பட்டு மகப்பேறு வார்டில் இருந்த 19 பேரையும் மீட்டனர்.
மேலும், மகப்பேறு வார்டுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேநேரம் அங்கு வந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதையடுத்து, வார்டு முழுதும் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் பழையபடி மகப்பேறு வார்டு இயங்கியது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில், யாருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.