/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.07 கோடி தங்க பசைஏர்போர்டில் பறிமுதல்
/
ரூ.1.07 கோடி தங்க பசைஏர்போர்டில் பறிமுதல்
ADDED : மே 04, 2024 12:22 AM

சென்னை, ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜா நகரில் இருந்து 'ஏர் அரேபியா' விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணியரிடம், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் வழக்கமான பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர், சுற்றுலா பயணியாக சார்ஜா சென்று, திரும்பி வருவது தெரிய வந்தது. அவர் மீது சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
இதில், உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட பார்சலில் இருந்து, 1.7 கிலோ தங்கப்பசை சிக்கியது. அதன் சர்வதேச மதிப்பு 1.07 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.