/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிரிஜ்'ஜில் மின்கசிவு சிறுமி பலி
/
'பிரிஜ்'ஜில் மின்கசிவு சிறுமி பலி
ADDED : ஆக 07, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி, நந்தவன மேட்டூர், நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம், 29; மகளிர் சுய உதவிக்குழுவுக்கு லோன் வாங்கி தரும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா, 25. தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரூபாவதி, 5; தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை, ரூபாவதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, 'பிரிஜ்'ஜை திறந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சிறுமி மயங்கி விழுந்தாள்.
பிரியா, மகளை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, அவரை மருத்துவர்கள் பரிசோதிக்கையில் சிறுமி இறந்தது தெரிய வந்தது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.