/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தை மறுவாழ்வு தந்த குளோபல் டாக்டர்கள்
/
ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தை மறுவாழ்வு தந்த குளோபல் டாக்டர்கள்
ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தை மறுவாழ்வு தந்த குளோபல் டாக்டர்கள்
ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தை மறுவாழ்வு தந்த குளோபல் டாக்டர்கள்
ADDED : மார் 04, 2025 08:44 PM
சென்னை:பிறக்கும்போதே ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு, நுட்பமான அறுவை சிகிச்சை செய்து, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றி உள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் எம்.சரவண பாலாஜி, என்.பிரதீபா ஆகியோர் கூறியதாவது:
கருவிலேயே மார்புக்கும், வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியான உதரவிதானத்தில், துவாரத்துடன் இருந்த சிசுவானது, பிறந்தவுடன் ஒற்றை நுரையீரலுடன் காணப்பட்டது.
அந்த துவாரத்தின் வாயிலாக, வயிற்று பகுதியில் இருந்த உறுப்புகள், மார்பு பகுதியில் ஊடுருவி, நுரையீரல் மற்றும் இதயத்தை அழுத்தியதே, ஒருபக்கம் நுரையீரல் வளராததற்கு காரணம்.
இதன் காரணமாக, குழந்தை பிறந்தவுடன் இயல்பாக சுவாசிக்க இயலவில்லை. செயற்கை சுவாச சிகிச்சையில் இருந்த அக்குழந்தைக்கு, நெஞ்சுகப் பகுதியில் சிறு கீறலிட்டு, உள்ளுறுப்புகளை சீராக்கும், 'தொரோஸ்கோபி மெஸ்பிளாஸ்டி' சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன் வாயிலாக, உதரவிதானத்தில் இருந்த துவாரம் சீராக்கப்பட்டு, உறுப்புகளின் செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டன. பிறந்த மூன்றாவது நாளில், பச்சிளங்குழந்தைக்கு, சவாலான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமடைந்து, ஆரோக்கியமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.