/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோல சரஸ்வதி பள்ளி போட்டி 8,000 மாணவர்கள் பலப்பரீட்சை
/
கோல சரஸ்வதி பள்ளி போட்டி 8,000 மாணவர்கள் பலப்பரீட்சை
கோல சரஸ்வதி பள்ளி போட்டி 8,000 மாணவர்கள் பலப்பரீட்சை
கோல சரஸ்வதி பள்ளி போட்டி 8,000 மாணவர்கள் பலப்பரீட்சை
ADDED : ஆக 06, 2024 12:54 AM

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் கோல சரஸ்வதி வைணவ மேல்நிலைப் பள்ளியின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு, பள்ளிளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின.
தடகளம், வாலிபால், கால்பந்து, கோ - கோ, பேட்மின்டன் உட்பட 10 விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
கீழ்ப்பாக்கம், கோல சரஸ்வதி வைணவ மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ கல்லுாரி, நேரு பூங்கா விளையாட்டுத் திடல் ஆகிய இடங்களில் நடக்கின்றன.
முதல் நாளான நேற்று, நேரு பூங்காவில் தடகளப் போட்டி நடந்தது. அதில், 100 மீ., 200 மீ., முதல் நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ரிலே உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
மொத்தம் 100 பள்ளிகளில் இருந்து, 2,000 மாணவ - மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மற்ற போட்டிகளில் 200க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 8,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
போட்டிகள், நாளை மறுநாள் வரை மூன்று இடங்களில் நடக்கின்றன.