ADDED : மே 03, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம், பல்லாவரம் - திரிசூலம் இடையே, நேற்று காலை, 22 வயது மதிக்கத்தக்க நபர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த அஜய்குமார், 22, என்பதும், பி.இ., பட்டதாரியான அவர், நேற்று முன்தினம் இரவு, சினிமாவிற்கு செல்வதற்காக, தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து, பல்லாவரம் ரயில் நிலையத்தில் இறங்கி சென்றதும், பின், ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.