/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ துாண்களில் ஓவியங்கள் அழிப்பு விளம்பரங்களுக்கு அனுமதி
/
மெட்ரோ துாண்களில் ஓவியங்கள் அழிப்பு விளம்பரங்களுக்கு அனுமதி
மெட்ரோ துாண்களில் ஓவியங்கள் அழிப்பு விளம்பரங்களுக்கு அனுமதி
மெட்ரோ துாண்களில் ஓவியங்கள் அழிப்பு விளம்பரங்களுக்கு அனுமதி
ADDED : ஏப் 30, 2024 01:07 AM

சென்னை, மெட்ரோ ரயில்களின் மேம்பால பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள துாண்களில் விளம்பரங்கள் செய்து வருவாயை பெற, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேம்பால பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள துாண்களிலும் விளம்பரம் செய்ய அனுமதிக்க உள்ளது. இதற்காக, ஏற்கனவே துாண்களில் வரையப்பட்ட ஓவியங்கள் நீக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில் கட்டண உயர்வு இன்றி, மாற்றுவழிகளில் வருவாய் பெருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்களில் மட்டுமே இதுவரை விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டது.
தற்போது, மெட்ரோ ரயில் நிலையங்களின் மேம்பால துாண்களில், விளம்பரம் பெற டெண்டர் வெளியிட்டுள்ளோம். ஆலந்துார், பரங்கிமலை, சின்னமலை, திருமங்கலம், சி.எம்.பி.டி., அசோக் நகர், திருவொற்றியூர், சைதாப்பேட்டை, கிண்டி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் மெட்ரோ மேம்பால பாதைகளுக்கான துாண்களில், விளம்பரங்கள் அனுமதிக்கப்பட உள்ளது.
நிறுவனங்கள் தேர்வு செய்து, விளம்பரங்கள் செய்ய குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதிக்கப்படும். இதன்வாயிலாக, மெட்ரோ நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

