ADDED : ஏப் 17, 2024 12:41 AM

சென்னை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' அமைப்பின் சென்னை பிரிவுக்கு, 2024 - 26 ஆண்டு காலத்துக்கான புதிய நிர்வாகிகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, 'சவுத் இந்தியா ஷெல்டர்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகமது அலி, புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்வு தலைவராக மெஹூல் எச் ஜோஷி, செயலராக அஸ்லாம் பக்கீர் முகமது, பொருளாளராக விஸ்வஜித் குமார், துணை தலைவராக சுமன் வோரா, எம். ஆறுமுகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக, பி. கிருத்திவாஸ், ரஞ்சித் ரத்தோட், கே. மோத்தீஷ் குமார், டி. அருள், எஸ்.எஸ். பிரசாத்பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னையில் நடந்த இவர்களின் அறிமுக விழாவில், கிரெடாய் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் இர்பான் ரசாக், தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் சுனில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய புதிய தலைவர் முகமது அலி, 'ரியல் எஸ்டேட் துறை தொடர்பான அரசின் நடவடிக்கைளுக்கு உறுதுணையாக இருப்போம். கட்டுமான துறை வளர்ச்சிக்கு கிரெடாய் அமைப்பின் பங்களிப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
