/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரீன் இன்வேடர்ஸ் - பர்பிள் பிளேசர்ஸ் பிரேயர் 'டி - 20' பைனலில் பலப்பரீட்சை
/
கிரீன் இன்வேடர்ஸ் - பர்பிள் பிளேசர்ஸ் பிரேயர் 'டி - 20' பைனலில் பலப்பரீட்சை
கிரீன் இன்வேடர்ஸ் - பர்பிள் பிளேசர்ஸ் பிரேயர் 'டி - 20' பைனலில் பலப்பரீட்சை
கிரீன் இன்வேடர்ஸ் - பர்பிள் பிளேசர்ஸ் பிரேயர் 'டி - 20' பைனலில் பலப்பரீட்சை
ADDED : ஜூலை 04, 2024 12:21 AM
சென்னை, பிரேயர் 'டி - 20' இறுதிப்போட்டியில் கிரீன் இன்வேடர்ஸ் - பர்பிள் பிளேசர்ஸ் அணிகள் வரும் 10ம் தேதி பலப்பரீட்சை நடத்த உள்ளன.
டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பிரேயர் மகளிர் டி -20 கிரிக்கெட் போட்டிகள், தரமணி மற்றும் செங்குன்றம் பகுதியில் நடக்கின்றன.
கடைசி லீக் போட்டிகள், செங்குன்றத்தில் உள்ள மைதானத்தில் நடந்தன. இதில், முதல் ஆட்டத்தில், முதலில் களமிறங்கிய பிங்க் வாரியர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு, 142 ரன்களை அடித்தது. அடுத்து களமிறங்கிய சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து, 88 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.
54 ரன்கள் வித்தியாசத்தில் பிங்க் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு லீக் போட்டியில், ஆரஞ்சு டிராகன்ஸ் அணி முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு, 142 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த ரெட் ரேஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து, 122 ரன்களை அடித்தது. இதனால், 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆரஞ்சு டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதுவரை நடந்த அனைத்து லீக் சுற்றுகள் முடிவில், பர்பிள் பிளேசர்ஸ் மற்றும் கிரீன் இன்வேடர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இறுதிப் போட்டிகள் வரும் 10ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.