/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரீன் இன்வேடர்ஸ் 'டி - 20'யில் வெற்றி
/
கிரீன் இன்வேடர்ஸ் 'டி - 20'யில் வெற்றி
ADDED : ஜூன் 27, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பிரேயர் மகளிர் டி - 20 கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் சென்னையில் துவங்கியது. நேற்று நடந்த போட்டியில், 'டாஸ்' வென்ற கிரீன் இன்வேடர்ஸ் அணி, 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து, 139 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 19.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 109 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 30 ரன்கள் வித்தியாசத்தில், கிரீன் இன்வேடர்ஸ் அணி வெற்றி பெற்றது.